திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கிருஷ்ணகுமாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகுமாரியின் தந்தை ஐயப்பனுக்கு தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கிருஷ்ணகுமாரியின் கழுத்தில் நைலன் கயிறு கொண்டு நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் மயக்கமடைந்த நிலைக்கு சென்ற கிருஷ்ணகுமாரியை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


அப்போது, கிருஷ்ணகுமாரியின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததை பார்த்த மருத்துவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் கிருஷ்ணகுமாரியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணகுமாரி மேல் படிப்பிற்கு தந்தையிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர் மருப்பு தெரிவித்ததால் கிருஷ்ணகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!


இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமாரியை அவரின் பெற்றோர் அன்று இரவே அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அனுமதி இன்றி தனியார் மருத்துவமனைக்கு  அவசர அவசரமாக மாற்றியுள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிய வரவே போலீஸார் கிருஷ்ணகுமாரியின் தாயாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, அவர் தனது மகள் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரம் தந்தைக்கு தெரிய வந்ததால் அவர் நைலன் கயிறு கொண்டு மகளை கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.


அது மட்டும் இன்றி ஒரு வாரத்திற்கும் மேலாக கிருஷ்ணகுமாரிக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமாரியின் தந்தை ஐயப்பன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  


மேலும் படிக்க | வீட்டில் தாய், தந்தை சண்டை - மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட +2 மாணவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR