சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!

நாமக்கல் அருகே சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 14, 2022, 06:38 PM IST
  • படிக்காமல் ஊர் சுற்றிய 10-ம் வகுப்பு மாணவர்
  • தட்டிக்கேட்ட தாய்மாமனுக்கு 17 இடங்களில் கத்திக்குத்து
  • 10-ம் வகுப்பு மாணவர் உள்பட 5 பேர் கைது
சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை! title=

நாமக்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்னத்துரை என்பவரின் மகன் பிரபாகரன்(29) கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது அக்கா மகன் அகிலன் நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத அகிலன் செல்லப்பா காலணியை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றியதாக தெரிகிறது. 

இந்த நிலையில் அக்கா மகன் அகிலன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்கு சுரேந்தர் தான் காரணம் என நினைத்த பிரபாகரன் செல்லப்பா காலணிக்கு சென்று சுரேந்தரிடம் கேட்டுள்ளார். அப்போது அகிலனை பிரபாகரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட சுரேந்தரையும் பிரபாகரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் மேதரமாதேவி பகுதியை சேர்ந்த தனது நண்பர் விக்னேஷ் என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து திடீரென விக்னேஷ் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் செல்லப்பா காலணிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியது. விக்னேஷ் தரப்பை சேர்ந்த சிலர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவருக்கு 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் செல்லப்பா கலாணி சுரேந்தர், மேதரமாதேவி பகுதியை சேர்ந்த கவின் உட்பட 5 பேரை கைது செய்தனர். 

உயிரிழந்த கார் ஓட்டுநர் பிரபாகரனுக்கு திருமணமாகி இருமனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அக்கா மகன் ஊதாரி தனமாக சுற்றித்திரிவதை தட்டிக்கேட்ட தாய்மாமன் 17 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | திண்டுக்கல்லில் தொடரும் பயங்கரம்; ஜவுளி வியாபாரி தலை துண்டித்து படுகொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News