அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் மாரியப்பன். இவர் அதே தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தமிழ்மணி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவரும் ஒரே தெருவைச் சேர்ந்த எதிர் எதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது மாரியப்பன் சென்னையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் சேர்ந்து அதே பேக்கரியில் தமிழ்மணியும் வேலை பார்த்து வருகிறார். 


இந்நிலையில் இவர்கள் இருவரின் காதலுக்கும் மாரியப்பன் பெற்றோர் அதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு பயந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த செய்தியை அவர்களே தங்கள் வீட்டு குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளனர். இதற்கு மாரியப்பனின் பெற்றோர்கள், சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், எதிரெதிரே வீடு என்பதால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு


இந்நிலையில் இரு குடும்பங்களுக்கும் பயந்து இளம் புதுமண தம்பதிகள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். புதுமண தம்பதிகளை போலீஸ் நிலையத்தில் அமர வைத்து, இரு வீட்டு தரப்பு குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்தார். 


அப்போது மாரியப்பன் வீட்டு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் நடந்து முடிந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் தகராறு செய்து வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என கூறி விட்டு திரும்பி சென்று விட்டனர். 



மாரியப்பன் குடும்பத்தினரை சமாதானம் செய்ய முயற்சித்தும் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து விசாரணைக்குப்பின் பெண் வீட்டாரான தமிழ்மணியின் பெற்றோர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். பின்னர் புதுமணத் தம்பதிகள் மாரியப்பன் தமிழ்மணி ஆகிய இருவரையும் பெண் வீட்டார்களுடன் அனுப்பி வைத்தனர்.


மேலும் படிக்க | நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR