மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்: 13 அம்ச கோரிக்கையை அளித்தார் அமைச்சர்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த மா.சுப்பிரமணியன் 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நீட் தேர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பலவித விஷயங்களைப் பற்றி மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டெல்லி சென்றுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் சந்திப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த மா.சுப்பிரமணியன் 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் அளித்துள்ளார்.
தமிழகத்துக்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகியவை பற்றி முக்கியமாக இந்த சந்திப்பில் பேசப்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை வலியுறுத்தும் 13 அம்ச கோரிக்கைகளை மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டியாவிடம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிகை தற்போது குறைந்துவந்தாலும், தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருந்து வருகிறது. முன்னதாக, சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் அக்கடிதத்தில் கூறியிருந்தார். கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகவும் அது நீக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை (PM Modi) கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசிகளுக்கான கூடுதல் ஒதுக்கீடு குறித்து இன்று மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடனான சந்திப்பு
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (M.Subramanian), நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான ஒரு மனுவையும் அவர் அளித்துள்ளார்.
நீட் தாக்கம் குறித்து ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நேற்று வெளிவந்த நிலையில், இன்று மா.சுப்பிரமணியன் மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து உரையாடியுள்ளார் என்பது குறிப்பிடைத்தக்கது.
தமிழகத்தில் கூடுதலாக நான்கு நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் - தர்மேந்திர பிரதான்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக நான்கு நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கபடும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, விருதுநகர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR