தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 01:29 PM IST
  • தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் - முதல்வர் ஸ்டாலின்.
  • கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின்.
  • தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,307 ஆக உள்ளது.
தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் title=

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு மூச்சுடன் நடந்து வருகின்றன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத ஆர்வத்துடன் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கும் காட்சிகளை நாம் தினமும் காண்கிறோம். 

இந்த நிலையில், மீண்டும் தடுப்பூசி (Vaccine) தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருவதையும் காண்கிறோம். தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. தமிழகத்திலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை காரணமாக, சென்னை மற்றும் இன்னும் பல இடங்களில் சில தினங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டும் வேளையில், தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பது தடுப்பூசி செயல்முறையில் பெரும் தடையாக உள்ளது.

ALSO READ: Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு

இந்த நிலையில், சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகவும் அது நீக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை (PM Modi) கேட்டுக்கொண்டுள்ளார்.

இது மட்டுமின்றி அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளில் ஜி.எஸ்.டி-ஐ நீக்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில்,  தமிழகத்தில் நேற்று புதிதாக 2652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3104 ஆக இருந்தது . தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கோவிடால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக பதிவாகியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 

தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,307 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கோவிட் நோய்தொற்று பாதிப்பு 31,819 ஆக உள்ளது.

ALSO READ: ரஜினி நடத்திய கூட்டம்; பாபுலாரிட்டியை புதுப்பிக்கும் முயற்சியா; வெளிவராத தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News