Madras HC: தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கலாமா? 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்
Madras HC On National Tamil Development Council: தமிழ் மொழி வளர்ச்சிக்காக திரிபுவன சக்கரவர்த்தி சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக திரிபுவன சக்கரவர்த்தி சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகந்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தொன்மையான தெய்வீக மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த போதும், துரதிருஷ்டவசமாக அது நடைமுறைக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்காக காசி தமிழ் சங்கமம் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதால், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டுகளில் உருது, சிந்தி, இந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் மேம்பாட்டுக்காக தேசிய கவுன்சில் அமைத்த மத்திய அரசு, செம்மொழியான தமிழ்மொழிக்கும் அதைப் போன்ற தேசிய கவுன்சிலை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நான்கு வாரங்க்ளில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் படிக்க | வீராங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர் ஆவார். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து பாண்டிய மன்னராக பொறுப்பெற்ற சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில், பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழ் வளர்த்த மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர்களில் ஒருவரான, சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த டயட் சார்ட் ஃபாலோ பண்ணுங்க போதும்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ