வரும் 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக் கழகத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தின் இரட்டை B.Sc., படிப்பை  அறிமுகப்படுத்தவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் (2022-2023) அறிமுகப்படுத்தப்படவுள்ள இரட்டை B.Sc., பட்டப்படிப்பு ( Blended B.Sc., Degree ) அறிவியல் பாடப் பிரிவில் வழங்கப்படவுள்ளது. 


அதாவது, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல், போன்ற அறிவியல் பாடப்பிரிவுகளை படிக்க விரும்பும் மாணவர்கள், இரட்டை பி.எஸ்.சி. பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் முதல் இரண்டு வருடங்களில் நடத்தப்படும் நான்கு செமஸ்டர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். 


இறுதியாண்டில் உள்ள இரண்டு செமஸ்டர்களில் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம்.


மேலும் படிக்க | அறிமுகமானது MediaTek Dimensity 1300! OnePlus Nord 2T உடன் வெளியாகும்


சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த புதிய முயற்சியானது மெல்போர்ன் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு நம் தமிழக கல்வி தகுதியை உயர்த்த முன்னோடியாக இருக்கும் என கல்வி நிபுணர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.


இந்த இரட்டை B.Sc., பட்டப்படிப்பை ( Blended B.Sc., Degree ) ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் பயிலலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட சென்னைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையத்துக்கு, பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.


இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் கையெழுத்தாகவுள்ளது.


இந்த புதிய பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி முழுமைப் பெறும் வரை சென்னை மற்றும் மெல்போர்ன் பேராசிரியர்கள் இணைந்து பணியாற்றி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரூ. 8,000-க்கும் குறைவாக கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR