Tamil Nadu Latest News In Tamil: பள்ளிகளில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் ஏழாம் தேதி முதல் 11 வரையிலான காலகட்டத்தில் "ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்" போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என்ற மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


"ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்" சுற்றறிக்கை குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில், "பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் - வரும் அக்டோபர் 7 - 11 வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். 



இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர் மற்றும் மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க - உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?


மேலும் படிக்க - மாநாட்டிற்கு வருபவன் தான் உண்மையான தொண்டன் - புஸ்ஸி ஆனந்த்!


மேலும் படிக்க - தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டது ஏன்...? முழு பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ