யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, மகளிருக்கான மகப்பேறு கால  நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக  உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: 


''2017-18 காலத்தில் மகப்பேற்றின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு  அடுத்தபடியாக  இருந்த தமிழகம் இப்போது தெலங்கானாவுக்குப் பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது!


2016-17ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் (ஒரு லட்சம் மகப்பேறுகளில்) கேரளத்தில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் தெலங்கானம் தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டுமே குறைந்துள்ளது. ஆந்திரத்துடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்படலாம்!


தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆகக் குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்!


யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால  நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக  உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்!''


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 



ட்விட்டர் பதிவுடன்  2015-17, 2016-18, 2017-19 காலத்தில் மகப்பேற்றின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதற்கான பட்டியலையும் அன்புமணி இணைத்துள்ளார். 


இப்பதிவு வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் பின்னூட்டம் இட்டு வருகின்றனர். தாய்மையைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும், NEET நீடித்தால் எதிர்காலம் இன்னும் மோசமாகும் என்றும், பிரசவ வார்டில் உள்ள 80 தாய்மார்களுக்கு 1 செவிலியர் மட்டுமே உள்ளார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாதம் 100 பிரசவங்கள் நடக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 40 மகப்பேறு மருத்துவர்களும், 40 முதுகலை மாணவர்களும், மாதம் 400 பிரசவங்கள் நடக்கும் அரசு மருத்துவமனைகளில் 4 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். 


மேலும் படிக்க | சிம்பு ஸ்டைலில் திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


மேலும் படிக்க | "தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஸ்டாலின்!" - பாராட்டிய மிஷ்கின்