பெங்களூரு: அண்மையில் தேவகவுடாவுடன், தெலுங்கானா முதல்வர் சந்திப்பு நடத்தியுள்ளது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான தேசிய அளவில் மெகா கூட்டணியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார்.


தேவேகவுடாவை, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியபிறகு, நாட்டில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பான தகவலை சூசகமாக தெரிவித்தார்.


இந்த சந்திப்பின்போது, கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு மதிய உணவை சந்திரசேகர ராவ் சாப்பிட்டார்.


சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த அரசியல் முக்கியத்துவம் பெற்ற சந்திப்புக்கு பிறகு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். பெங்களூருவில் இருந்து ஹைதிராபாதுக்கு கிளம்புவதற்கு முன்பு நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.


மேலும் படிக்க | திராவிட மாடல் என்றால் என்ன?... பிரதமர் மேடையில் விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை சந்தித்தது, நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 2, 3 மாதங்களுக்கு பிறகு பரபரப்பான செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.


கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தபோது, குமாரசாமி முதலமைச்சர் ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று சந்திரசேகர ரவ் தெரிவித்தார்.


இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன என்று தெரிவித்தார்.


இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | பிரதமருக்கு காவி குடை பிடிக்கும் திமுக?


நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை என்று தெரிவித்தார்.


வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன, நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை என்று சந்திரசேகர ராவ் கூறினார்.


சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பற்றி குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


மேலும், காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR