சுற்றுலாத்துறை தனியார்மயமாக்கப்படவில்லை என்றும், அரசால் செய்ய முடியாதவற்றை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில் சர்வதேச, வெளிமாநில சுற்றுலா பயணியரை ஈர்க்க மாநில சுற்றுலாத்துறை தொடர் முயற்சி எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், Tourist Guide-களுக்கான 3 நாள் பயிற்சி முகாமை சென்னை ராயப்பேட்டையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் ஜூலை 15-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி


பன்னாட்டு மொழித் திறன், புரிந்துகொள்ளும் திறன், அனுசரித்து செல்லும் பண்பு, தொடர்பு திறன், அசாதாரண சூழல்களை கையாளும் திறன் உள்ளிட்டவற்றை டூரிஸ்ட் கைடுகளுக்கு தரக்கூடிய வகையில் ரூ.50 லட்சம் செலவில் தொடர் பயிற்சி வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று பயிற்சி முகாம் தொடங்கியது.


மாநிலம் முழுவதும் இருந்து பல டூரிஸ்ட் கைடுகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "எல்லாருக்கும் எல்லாம்" என்பதே திராவிட மாடல் என்றும், சுற்றுலா பயணிகளை கைடுகள் கவனமாக கையாள வேண்டும் என்றும், சுற்றுலா பயணியர் விரும்பும் வகையிலும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் கைடுகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 


மொழி, புரிந்துகொள்ளும் வகையிலான எளிய, தெளிவான உரையாடல், வரலாற்று அறிவு, பொறுமை ஆகிய அம்சங்கள் கைடுகளுக்கு தேவை என்று பேசிய அமைச்சர், சுற்றுலா கைடுகளை நெறிப்படுத்தவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் ரூ.50 செலவில் புதிய பயிற்சித் திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறினார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை தனியார்மயமாகிவருவதாக சொல்வது தவறு என்றும், அரசால் ரூ.2,000 கோடிக்கு கப்பல் வாங்கி விடுவதெல்லாம் இயலாத காரியம் என்றும், எதையெல்லாம் அரசால் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும் என்றும் அரசால் செய்ய முடியாததை, தனியாருடன் இணைந்து செயல்படுத்தி வருவதாகவும் விளக்கமளித்தார். 


மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம் எதற்காக?... மாணவர்களுக்கு விளக்கிய முதலமைச்சர்


சென்னை - தூத்துக்குடி இடையே பயணியர் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து அருகாமையில் உள்ள இடங்களுக்கு கடலில் படகு சேவையைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும் கூறிய அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும், அதேவேளையில் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR