மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் ஜூலை 15-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Jun 27, 2022, 05:37 PM IST
  • மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை
  • வரும் 15-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார்
  • அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் ஜூலை 15-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி title=

அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஐடிஐ முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிற் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்களுக்கு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், உள்ளிட்ட 6 பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தொழில் கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | மாணவிகளுக்கு ரூ.1000: திமுக அரசு அதிரடி..!

மேலும், வரும் ஜூலை 18-ம் தேதி முதல் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் சேர 85 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்து உள்ளதாகவும், பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு சீட் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்

பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி என அரசுப் பதிவில் உள்ள நிலையில், 11-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டால் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, அன்றைய தினம் அண்ணா பல்கலைகழகத்தின் 3 பாடப் பிரிவுகளில் நடைபெறவுள்ள தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம் எதற்காக?... மாணவர்களுக்கு விளக்கிய முதலமைச்சர்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News