புது டெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். சுமார் 25 நிமிடங்களுக்கு நடந்த இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசப்பட்டது என தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த 5 ஆண்டுகளுக்கான தமிழத்தின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் மனுவாக வழங்கியுள்ளார். நீட் தேர்வுகள் குறித்தும் முதல்வர் பிரதமருடன் விரிவாக பேசியதாகத் தகவல்கள் வந்துள்ளன. முதல்வரானவுடன் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பிரதமரை சந்தித்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்கள் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். முதல்வர் பொறுப்பேற்றவுடன் முதல் முறையாக டெல்லிக்கு பிரதமரை சந்திக்க வந்துள்ளதாகவும் பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக, மன நிறைவு தந்த சந்திப்பாக இருந்தது என்றும் முதல்வர் கூறினார். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்ததாகவும், எந்த விஷயமானாலும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் மோடி (PM Modi) கூறியதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 


தமிழக வளர்ச்சி தொடர்பான பல முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமர் முன் வைத்ததாக தெரிவித்தார். அவற்றின் விவரங்கள் பின் வருமாறு:


- தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


ALSO READ: டெல்டா விவசாயிகள் நலனுக்காக ரூ. 61.09 கோடி மதிப்பில் திட்டம் -முதலமைச்சர் அறிவிப்பு


- செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தியை துவங்க கோரிக்கை.


- சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் செயல்பாட்டைத் தொடக்க தேவையான நடவடிகை எடுக்கப்பட வேண்டும்.


- நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை.  


- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வெண்டும்


- தமிழகத்துக்கு ஜிஎஸ்டி தொகையை உடனடியாக வழங்கவேண்டும்


- கட்சத்தீவு மீட்கப்பட வேண்டும்


-மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


- முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும்


- புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்


- சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்


- கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்


- குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளான் சட்டங்கள் திருமப்பேற வேண்டும்


- தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வெண்டும்


- சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிகை எடுக்கப்பட வேண்டும்


நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் (Delhi) உள்ள இடதுசாரி தலைவர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR