டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் மோடியை சந்திக்க, இன்று மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 17, 2021, 11:05 AM IST
டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு! title=

புது டெல்லி: தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க, இன்று மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழக  அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

விமான நிலையத்திலிருந்து டெல்லி உள்ள தி.மு.க. கட்சி அலுவலகதிற்கு சென்ற பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது கொரோன தடுப்பூசி விநியோகம், நீட் தேர்வு , கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ALSO READ |  மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் + பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு "மத அடிப்படைவாதிகளின்" அச்சுறுத்தல் காரணமாக இசட் பிளஸ் (+Z+ Security ) அளவிலான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

முதலமைச்சரான பின்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக நாளை, மு.க. ஸ்டாலின் (M.K. Stalin) சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். மேலும் சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) தலைவர்கள் உட்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ALSO READ | முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News