மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் + பாதுகாப்பு

"மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 17, 2021, 10:45 AM IST
மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் + பாதுகாப்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, "மத அடிப்படைவாதிகளின்" அச்சுறுத்தல் காரணமாக இசட் பிளஸ் (+Z+ Security ) அளவிலான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

"மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலமைச்சரான பின்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, நாளை, அதாவது ஜுன் 18 ஆம் தேதி, மு.க. ஸ்டாலின் (M.K. Stalin) சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். மேலும் சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) தலைவர்கள் உட்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல 11 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக டெல்லி சென்ற, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பிரதமர் மோடியை சந்தித்து மாநில உரிமைகளை பற்றி பேச உள்ளார்.

தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்து பேசவுள்ளார். 

ALSO READ |  அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News