முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக,  பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Jun 17, 2021, 06:36 AM IST
  • பிரதமர் மோடியுடனான முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, நாளை, மு.க. ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக,  பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரதமர் மோடியை (PM Modi) சந்திக்க  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டிருந்ததார். தமிழக முதல்வர், மு,க.ஸ்டாலின்  பிரதமரை சந்திக்கும் போது பல முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோன தடுப்பூசி விநியோகம், நீட் தேர்வு , கருப்புபூஞ்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

டெல்லி பயணத்திற்காக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.

காலை 10 மணிக்கு அவர் தில்லி விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் தில்லியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகதிற்கு சென்ற பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.

பின்னர் இன்று மாலை 5 மணிக்கு , தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

ALSO READ: TN Lockdown: மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, நாளை, அதாவது ஜுன் 18 ஆம் தேதி, மு.க. ஸ்டாலின் (MK Stalin) சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார்.  இந்த சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் செய்கிறார். பிரதமர் மோடியுடனான முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சி மற்றும் கொள்கை ரீதியாக  இரு தலைவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளபோதும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நலல் உறவு நிலவ வேண்டும் என்பதை இருவர்களும் விரும்புவதாலும். இந்த சந்திப்பு தமிழகத்தில் நல்ல விளைவுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

ALSO READ: Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News