பெரும் நகரத்தின் அமைவு கீழடி! விரைவில் கீழடி அருங்காட்சியம் திறக்கப்படும்: எம்பி வெங்கடேசன்
Keezhadi Excavations: தமிழகத்திலேயே முன்மாதிரியாக கீழடி அருங்காட்சியகம் அமையும் என உறுதியாக சொல்கிறார் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல முக்கியத் தகவல்களை குறிப்பிட்டார். மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் கனவுத்திட்டம் டைடல் பார்க் நிச்சயமாக அமையும் என்று தெரிவித்த அவர், 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு பிறகு எந்தவிதமான தொழில் அறிவிப்பும் இல்லை. தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் 600 கோடி ரூபாயில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.
மதுரைக்கும் தென் மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் ஒரு தலைமுறைக்கு பின் அறிவிக்கப்பட்ட பெரிய அறிவிப்பான இது, இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்த மாதத்துடன் முடிவடையும் கீழடி 8ம் கட்ட அகழ்வாய்வின் அபூர்வ கண்டுபிடிப்புகள்
முதல்வரை சந்தித்தபோது தான் அளித்த 21 கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று கூறிய அவர், மதுரை மத்திய சிறைச்சாலை இடமாற்றம், சிப்காட் அமைத்தல்,தொழில் நுட்ப பூங்கா அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.
மதுரையின் அடிக்கட்டமைப்புகள் சாலை, குடிநீர், வடிகால் அமைப்புகளை சரி செய்ய விரைவில் நல்ல அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என நம்புகிறேன் என்று கூறிய எம்.பி வெங்கடேசன், கீழடி அருங்காட்சியக வேலைகள் தொடர்பாக, ஒவ்வொரு முறை மதுரை வரும் போது முதல்வர் விசாரிக்கிறார் என்று குறிப்பிட்டார்.
கீழடி அருங்காட்சியக வேலைகள் பற்றி பேசிய எம்.பி சு வெங்கடேசன், அவை வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழக தொல்லியல் துறை, முன்மாதிரியான அருங்காட்சியமாக கீழடி அருங்காட்சியகத்தை அமைக்கும் என்றும், விரைவாக கீழடி அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் அதை திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.
கீழடி அகழாய்வு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நேற்று அகழாய்வில் கிடைத்த தங்கத்திலான மணி மிகுந்த ஆச்சிரியத்தை தருகிறது என்று கூறிய அவர், பத்தாண்டு கீழடி அகழாய்வு நடைபெறும் நிலையில், பத்தாண்டுக்கு பிறகும் புதிய புதிய பொருட்கள் கிடைத்து கொண்டே இருக்கிறது, இது வியப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
பெரும் நாகரீகத்தின், பெரும் நகரத்தின் அமைவு கீழடி என்பதற்கான நமது நம்பிக்கையை, இந்த சான்றுகள் மெய்ப்பிக்கின்றன என்று தெரிவித்தார். தமிழ் நாகரீகத்தின் பழமையினுடைய மணிஓசை ஒவ்வொரு நாளும் அகழாய்வு வழியாக ஒலித்து கொண்டுள்ளது. நிச்சயமாக கீழடி அருங்காட்சியகம் முன்மாதிரி அருங்காட்சியகம் அமையும் என எம்.பி சு வெங்கடேசன், தனது செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்
மேலும் படிக்க | கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும்,