திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் உள்ள புங்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த நெடுமலை கிராமத்தில் வாடிவாசல் கருப்பு கோவில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள களத்துமேட்டுப் பகுதியில் முட்புதர்களுக்கிடையே கிடந்த பாறைகளில் செக்குக்கல் ஒன்று எழுத்துப்பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெடுமலை கிராமத்தைச் சேர்ந்த நா.சதீஸ் குமார் என்பவர் அளித்த தகவலின் பேரில் பள்ளி முதல்வர் பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள், சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர்.
இதில் அந்த செக்கு கல்வெட்டு 76 செண்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 செண்டிமீட்டர் உள்விட்டமும் கொண்டுள்ளது. இந்த செக்கானது 13 செண்டிமீட்டர் விட்டத்தைக்கொண்ட துளையுடன் காணப்படுகிறது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழியில் எண்ணெய் ஆட்டுவதற்கான வசதி கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இச்செக்கில் மூன்று வரிகளுடன் கூடிய எழுத்துகளைக் கல்வெட்டாகப் பதித்துள்ளனர்.
அதாவது, கல்வெட்டுப் பாடம்:
1.ஸ்ரீ கடம்பம் புவ[ந]
2.[வர்]க்கு சாதனமி
3.ட்ட
மேலும் படிக்க | Primordial Apartments: 8500 ஆண்டு பழமையான வீடுகள் சொல்லும் கலாச்சாரம் இது யுஏஇ வீடு
அதனை வரலாற்று ஆய்வாளர் திரு இராஜகோபால் சுப்பையா வாசித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறியதாவது, ‘எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இந்தச் செக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தச் செக்கிற்கு வடமேற்கே 150 அடித் தொலைவில் உள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட அய்யனார் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தருவது வழக்கம். அதில்தான், மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டுவார்கள். அதன்படி பார்த்தால், கண்டுபிடிக்கப்பட்ட இந்த உரலில்தான் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்கள் எண்ணையை ஆட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே!
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது திருச்சியில் கண்டெடுக்கபட்ட இந்த கல்வெட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருச்சியில் செக்குக் கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காது என்று ஆய்வாளர்கள் கருதி வந்த நிலையில், தற்போது இந்த செக்கு கல்வெட்டு கிடைத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த செக்கு கல்வெட்டை பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR