கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

Keezhadi Excavations: கீழடி அகழாய்வில், கொந்தகை  தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.... அதில், முதன் முறையாக முதுமக்கள் தாழியில் நெல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 02:57 PM IST
  • கீழடி அகழாய்வில் கொந்தகை தளத்தில் அரிய கண்டுபிடிப்பு
  • மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன
  • எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி இந்த மாதத்துடன் முடிவடைகிறது
கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு title=

கீழடி: தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 8ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன.

அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று இரவு 2வது முழுமையான தாழி திறக்கப்பட்டது.

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்ட குழுவினர், நான்கரை அடி உயரமுள்ள தாழியை திறந்து அதில் உள்ள பொருட்களை ஆய்விற்காக வெளியில் எடுத்தனர்.

தாழியினுள் சிதிலமடைந்த மண்டை ஓடும், கை கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. கொந்தகை  தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 8ம் கட்ட அகழாய்வில் மட்டும் 57 தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில், அதில் 18 தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு 8 மணிக்கு 123 வது தாழி திறக்கப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட தாழிகளினுள் மண்டை ஒடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகள் மட்டும் கண்டறியப்பட்டன. முதன் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இறுகி போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

அதே போல முதன் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து கூறும் தொல்லியல் துறையினர், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தாழிகள் அந்தஸ்தின் அடையாளமாகவே கருதப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

தாழிகளினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உட்பட 19 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாத்திரங்கள் அதிகளவு இருப்பதாலும், நெல் மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தராகவோ மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்க கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

மேலும், முகத்தின் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும் என்பதன் அடிப்படையில் பார்க்கும்போது, தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

8ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இம்மாதத்துடன் நிறைவு பெற உள்ளதையடுத்து, தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.  

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News