தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாசநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உரையாற்றினார். அப்போது, ‘அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோவில் எனது தொகுதியின் கீழ் உள்ளது. சமீபத்தில் நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் பக்தர்கள், வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். படிகளில் ஏறிச் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்ய மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சுவாமி மலை முருகன் கோவிலில் மின்தூக்கி அமைத்துத்தர அமைச்சர் முன்வருவரா?’ என்று கேள்வி எழுப்பினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்


இதற்குப் பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘நான்காம் படைவீடான சுவாமி மலை குறித்துப் பேசிய உறுப்பினர் முதலில் நன்றி சொல்வார் என எதிர்பார்த்தேன். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின்படி அங்கு தங்கும் விடுதிக்கு ஒப்பந்தம் அறிவித்து விடுதி கட்டப்படுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 திருக்கோவில்களில் மின்தூக்கி அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. கேட்டதெல்லாம் தருகின்ற அரசு இது. எனவே சுவாமி மலைக்கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும்’ என்றார். 


மேலும் படிக்க | ‘கூத்தாண்டவர் கோவில் திருவிழா’ - சிறப்பாக நடத்திமுடிக்க ஆலோசனை


இதனிடையே, முருகன் கோவிலுக்காக இஸ்லாமியர் ஒருவர் குரல் கொடுத்துப் பேசியது சட்டப்பேரவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மத நல்லிணக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களிலும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR