புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் வேலூர் அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் முதல் வார்டில் ஒருவர் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதம் உள்ள 8 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 2 வது வார்டில் போட்டியிட்டவர்களில் சீப்பு சின்னத்தில் நின்ற சுமித்ரா என்ற பெண் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே வார்டில் 110 வாக்குகள் பெற்று 9 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ் தோல்வியடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசுப் பணி ஊழலுக்கு முற்றுப்புள்ளி எப்போது? கனவாகும் தமிழக மாணவர்களின் அரசுப் பணி


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேர்தலில் தோல்வியுற்ற ராஜேஷுக்கு தனியார் தொண்டு நிறுவறத்தினர் போன் செய்துள்ளனர். "உள்ளாட்சி நிர்வாகம் மேம்பாடு" என்ற புத்தைகத்தை வாங்கிக்கொள்ளுமாறும், இது தங்களுக்கு உபயோகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர். சம்பந்தம் இல்லாமல் தன்னை அழைப்பதை சுதாரித்த ராஜேஷ், தனியார் தொண்டு நிறுவனத்திடம், ‘நான் வார்டு உறுப்பினர் கிடையாது. தேர்தலில் நான் தோற்றுவிட்டேன்’ என கூறியுள்ளார். ஆனால் தனியார் தொண்டு நிறுவனம் சொன்ன பதில் ராஜேஷையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனியார் நிறுவனம் சொன்ன பதில் இதுதான், ‘வெங்கட்டாபுரம் 2வது வார்டு உறுப்பினராக ராஜேஷ் என்ற உங்களது பெயர்தான் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. அதில் இருந்துதான் தொடர்பு எண்ணை எடுத்துப் பேசுகிறோம்’.


மேலும் படிக்க | இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ் நிராகரிப்பு - அரசின் புது அப்டேட்டுக்கு பாராட்டு


விவகாரம் குழம்பியதால், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்க்கு சென்றார் ராஜேஷ். இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது உண்மை வெளிவந்தது. 


இது தொடர்பாக வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாவது, ‘கணினியில் பதிவேற்றம் செய்யும் போது தவறுதலாக பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது. திருத்தம் செய்வதற்காக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில் தவறு திருத்தப்படும். மற்றபடி, இதில் எந்தவித குளருபடியும் இல்லை. வெங்கட்டாபுரம் 2வது வார்டில் சுமித்ராதான் வெற்றி பெற்றார் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR