மாற்றம் என்ற வார்த்தை, இதை நாம் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மாற்றம் நன்மையும் தரும், தீமையும் விளைவிக்கும். அதையும் அந்த மாற்றம் தீர்மானிக்கும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நம் கண்முன்னே மாறிக்கொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித இனம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருந்தாலும், நமது பூமியின் காலநிலை மாற்றங்கள் பெரும் அச்சத்தையும், கவலயையும் ஏற்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலநிலை மாற்றம் என்பது, இயற்கையின் மொத்த நிகழ்வுகளையும் மாற்றி அமைத்து வருகிறது. இந்த மாற்றம் நன்மைக்கா இல்லை நாசத்திற்கா என நின்று சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. இயற்கை பேரழிவுகளும், புதுவிதமான நோய் தாக்குதல்களும், அழிவின் விழிம்பில் மனித குலத்தை நகரத்திச் செல்கிறது என்ற அதிர்ச்சிகரமான விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பொருளாதார மேம்பாடு, புது புது கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளில் அக்கரை காட்டும் உலக அரசுகளுக்கும், தலைவர்களுக்கும் இந்த அழிவு ஒன்றும் விட்டு வீழ்ச்சியல்ல. நாட்டிற்கான திட்டத்தை தீட்டும் தலைவர்கள், சுற்றுச்சூழல் அம்சங்களைப் பற்றி அதிக அக்கறை கொண்ட உலகமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்


இதை வலியுறுத்தும் விதமாக ஐ.நா சபையின் கீழ் இயங்கும் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்பணர்வு அமைப்பான UNEP Only One Earth  என்ற ஒற்றை கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்த வெற்றிச் செல்வன் பல்வேறு தகவல்களை ஜீ தமிழ் செய்தியுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது.., 



ஐக்கிய நாடுகள் சபை Only One Earth  அப்டீன்ற தீம் வெளியிட்டிருக்காங்க. பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இல்லாத அம்சங்கள் பூமியில் மட்டும்தான் இருக்கு அதனால இந்த பூமிய பாதுகாக்க வேண்டிய கடமையும் கட்டாயும் மனித குலத்துக்கு இருக்கு. ஆனா காலநிலை மற்றம் காரணமா இயற்கையினுடைய அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருது. இதனால பூமி வெப்பம் அடைந்து கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுது. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் இயற்கை சூழலியல் மாற்றம் இந்தியாவையும், தமிழகத்தையும் பாதிச்சுட்டுதான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம் சூழல் சார்ந்து இருக்கக்கூடிய அழிவுகள்,  பூமி வெப்பமயமாதல்தான். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துலதான் Only One Earth அப்டீன்ற தீம் வெளியிடப்பட்டிருக்கு. 


மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை


 


அதேபோல, அடுத்த 10 ஆண்டுகள்ள பூமியினுடைய தட்ப வெப்ப நிலை 1.5 டிரிகி செல்சியஸ் உயரக்கூடும்னு அறிவுறுத்தப்பட்டிருக்கு. இதுபோன்ற வெப்பமயமாதல் காரணமா மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகும், கடல் கொந்தளிப்பு, அதிகப்படியான மழை, மிக அதிகமான வெயில் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களை மனத குலம் சந்திக்க நேரிடும். அது மட்டும் இல்லாம வெப்பம் காரணமாக பூமியில் இருக்கக்கூடிய 60 சதவீதம் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும். இதை கட்டுக்குள் கொண்டுவர எரிசக்தி உற்பத்தி முறையில் மாற்றம் கொண்டுவரனும். உணவு உற்பத்தியில் மாற்றம் கொண்டுவர வேண்டும், எரிசக்தி பயன்பாட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். உலக சுற்று சூழல் தினத்தில் இந்த உறுதி மொழியை எடுத்துக்கொள்வோம்.  


ஆண்டுதோறும் வருகிறது உலக சுற்று சூழல் தினம்.. இந்த வரும் மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என தோன்றலாம். முக்கியத்துவம் ஆண்டுகளை பொருத்து இல்லை ஆபத்துகளை பொருத்தே உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அதற்காகத்தான் நமக்கானது ஒரே ஒரு பூமி அதை காப்பாற்ற ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இயற்கையோடு இனக்கமாக வாழ்வோம்.., அதன் இயல்பு நிலை மாராமல் தடுப்போம், நமக்கானது ஒரே ஒரு பூமி அதை பாதுகாப்போம்.


மேலும் படிக்க | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR