Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

Picture Puzzle: கொடுக்கப்பட்ட ஓவியத்தை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் மறைந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடிக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2022, 03:59 PM IST
Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான் title=

புகைப்படப் புதிர்: இந்த படத்தில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள்', 'இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள்',  'இந்த புகைப்படத்தில் எத்தனை எண் 9 இருக்கிறது' என்பது போன்ற புதிர்கள் நமது மூளைக்கு பல சமூகவலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. நமது அறிவுத்திறனையும், கண் பார்வைத் திறனையும் சோதிக்கக் கூடிய இந்த வகையான புதிர்கள், இணையத்தில் மிக அதிக அளவில் பகிரப்படுகின்றன. 

தற்போது ஆப்சிகல் இல்யூஷன் என்னும் வகையிலான மாயையான தோற்றம் கொண்ட பல படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வகை படங்களுக்கு தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். 

வைரலாகி வரும் படங்களில் ஒரு புதிர் ஒளிந்துள்ளது, இது மூளைக்கு சிறந்த பயிற்சி எனலாம். இது ஒரு காட்டின் சூழலை கொண்டுள்ள ஒரு ஓவியம், அதில் 6 வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் மறைந்துள்ளன. 20 வினாடிகளில் அனைத்தையும் கண்டுபிடித்து காண்பிடித்தால், உங்கள் புத்தி கூர்மையை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். 

மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

புதிரை எளிதாக்க குறிப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் முதலை, ஒட்டகம், பட்டாம்பூச்சி, நாகப்பாம்பு, மான், முயல் போன்றவை மறைந்துள்ளன. இந்த குறிப்பு கொடுத்தாலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்க முடியாமல் பெரும்பாலானோர் தவிக்கின்றனர். 

இந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க, உங்கள் மூளையின் குதிரைகளை வேகமாக ஓடச் செய்ய வேண்டும். படத்தில், ஒவ்வொரு உயிரினமும் சாய்ந்த கிளைகளுக்கு இடையில் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் கவனம் செலுத்தி கவனமாகப் பார்த்தால், படிப்படியாக நீங்கள் அனைத்து உயிரினங்களையும் காண்பீர்கள்.

இதுதான் சரியான பதில்:

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவர்களுக்கான விடை மேலே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இடதுபுறம் உள்ள மரத்தைப் பாருங்கள், அதில் முதலை மறைந்திருப்பதைக் காணலாம். மரத்தின் வலது பக்கத்தில் கீழே ஒரு வண்ணத்துப்பூச்சி உள்ளது. பின்னர் மலையைப் பாருங்கள், அங்கே நீங்கள் ஒட்டகத்தைக் காண்பீர்கள். பட்டாம்பூச்சிக்கு அருகில் நாகப்பாம்பு மறைந்துள்ளது. வலதுபுறம் உள்ள மரத்தின் அருகே ஒரு மான் உள்ளது. முயல் அதே மரத்தில் இலைகளுக்குள் மறைந்து அமர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News