3 மாணவர்கள் பலி - 83 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளி!
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட பள்ளிக்கூடம் 83 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
நெல்லை மாவட்டம் டவுண் பகுதியில் அமைந்துள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுக்க இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, உரியப் பராமரிப்பின்றி செயல்பட்டு வந்த பள்ளியை காலவரையின்றி மூட பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமையாசிரியர் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன்படி, பல்வேறு துறைகள் சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
மேலும் படிக்க | மாற்றுத்திறன் ஒரு குறை இல்லை என்று சாதிக்கத் துடிக்கும் சந்தியா!
அதில் பராமரிப்பின்றி விடப்பட்ட கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி பல்வேறு மாற்றங்களைச் செய்ததுடன், பள்ளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 83 நாட்களாக பள்ளியில் நேரடி வகுப்பு நடைபெறாமல் ஆன்-லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனதாக பள்ளிக்கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்க உத்தரவிடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால் உதவி தலைமையாசிரியர் ஜாஸ்மின் ஆஞ்சலோ தற்காலிக தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, பள்ளிக்கூடத்திற்கு பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டு 83 நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிந்தனர்.
மேலும் படிக்க | தலைமை ஆசிரியர் திட்டியதால் சத்துணவு பெண் அமைப்பாளர் தற்கொலை முயற்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR