கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறன் ஒரு குறை இல்லை, கல்வி ஒன்றே போதும் கரை ஏற்றும் என்ற ஒற்றை குறிக்கோளோடு "சாதிக்கத் துடிக்கும் சந்தியா" விற்கு லக்ட்ரிக்கல் வண்டி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கருப்பாயின் மூத்த மகளான சந்தியா கீழ்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் ஆர்வம் காட்டும் சந்தியாவிற்கு ஆறுதல் சொல்ல கூட அம்மா அருகில் இல்லை. சந்தியாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி இறந்து விட, தாயும் கூலி வேலைக்கு வெளிமாநிலத்திற்கு சென்று விடுகிறார்.
மேலும் படிக்க | மாரத்தானில் ஓடிய டைப் 1 நீரிழிவு நோயாளிகள்..!
இந்தநிலையில் தாத்தா இல்லாத பாட்டி பெரும்மாவின் அரவணைப்பில் தான் சந்தியா,மோகனா ஆகிய இரு சகோதரிகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிறவியிலே ஊனமுற்ற சந்தியா தனது காலின் வலியக்கூட பொருட்படுத்தாமல் பள்ளிக்கு இரும்பு வண்டியின் உதவியோடு தினந்தோரும் தள்ளிக் கொண்டு நடந்து செல்கிறார்,அப்படி நடந்து செல்கையில் சில சமயம் சந்தியாவிற்கு கால் வலி அதிகம் இருக்க 8 வயதான இவரது தங்கை மோகனா உதவி வருகிறார் என்பதே நிதர்சனம்.
ஒரு சில நாட்களில் கால் வலி அதிகம் இருக்குபோது தனது பாட்டி இரவில் பிடித்து விடுவதாகவும், சில சமயத்தில் காய்ச்சலே வருவதாக தெரிவிக்கிறார். ஆகவே பள்ளிக்கு சென்று வர எலக்ட்ரிக்கல் வண்டி வழங்கிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR