TN Lockdown Update: கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. அதன்பின், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா (Corona Second Wave) தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு (Lockdown) மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்டறிந்து அவற்றை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் டாஸ்மாக் மூடப்படுகிறதா..!!!


இந்நிலையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் கடற்கரை, நீர்நிலைகள், கோயில் தெப்பங்குளங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதே போன்று அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் இருக்கும். அதேபோல் வருகிற 11 ஆம் தேதி ஆடிப்பூர திருவிழாவும் வருகிறது. இதையொட்டி அன்றைய தினமும் அம்மன் கோயில்களில் கொண்டாட்டம் இருக்கும். எனவே, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.


இந்த நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும், 9ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ | "பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR