"பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்

கடந்த பிப்ரவரி  மாதம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, அப்போதைய முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2021, 05:43 PM IST
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்.
  • சிலர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்று விடுவோமா என்ற அச்சத்திலும் உள்ளனர்.
  • ஓய்வு பெறும் வயது 60 என்பதை, 58 ஆக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
"பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள் title=

கடந்த பிப்ரவரி  மாதம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, அப்போதைய முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) அறிவித்தார். அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. அதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு 59 ஆக அதிகரிக்கப்பட்டது. 

கொரோனா பரவல் (Corona Virus) காரணமாக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து,  ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு. கிராசுட்டி போன்ற ஓய்வூதிய பலன்களை அளிப்பதற்கான நிதி தட்டுப்பாட்டினால், முந்தைய அதிமுக அரசு, ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தியது. 

இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என பரவலாக எதிர்ப்பும் எழுந்தது. 

இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று தான் பொதுவாக மக்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மை நிலைமை வேறாக உள்ளது. ஆம்,  பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு இதனால் சந்தோஷம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலாவதாக, ஓய்வூதிய பலன்களை வைத்து, மகன் அல்லது மகளின் கல்யாண செலவை சமாளித்தல், அல்லது அவர்களது உயர் கல்வி தொடர்பான செலவுகள் ஆகியவற்றை சமாளிக்க திட்டம் போட்டிருந்தவர்கள் இப்போது கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர். அவர்கள் தங்களுக்கான ஓய்வூதிய பலன்கள் எப்போது கிடைக்கும் என இப்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ALSO READ | தில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..!!!

இரண்டாவதாக பதவி உயர்வு. பணியில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களின், சீனியர்களின் ஓய்வூதிய வயது அதிகரித்திருப்பதால், சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வும் தள்ளிப் போயுள்ளது.  மேலும், இதனால், சிலர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்று விடுவோமா என்ற அச்சத்திலும் உள்ளனர். பதவி உயர்வு பெறாமலேயே, ஓய்வு பெற்று விட்டால், அதற்கான ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றில் பாதிப்பும் ஏற்படும். 

மூன்றாவதாக, காவல் துறையில் உள்ளவர்களுக்கு வாராந்திர விடுப்பு கூட இல்லாத  நிலையில், அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ள நிலையில், அவர்கள் இந்த ஓய்வூதிய வயது நீட்டிப்பை பெரும் சுமையாக நினைக்கிறார்கள். 

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது தி.மு.க. அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், ஓய்வு பெறும் வயது 60 என்பதை, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி வெளியனால், பல அரசு ஊழியர்கள் சந்தோஷன் அடைவார்கள் எனலாம்.

ALSO READ | அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை: EPS - OPS

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News