பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தஞ்சாவூர் (Tanjore) பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல. மத அரசியலுக்கு பா.ஜ.கவில் இடமில்லை. 


ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


மாணவி மரணத்தை பல கட்சிகள் அரசியலாக்கிவிட்டன. இறந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பா.ஜ.க போராடி வருகிறது. பா.ஜ.க தலைமை அமைத்த விசாரணை குழு நாளை மறுதினம் அந்த மாணவி ஊருக்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளார்கள்.


இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை.அப்பொழுது தான் முழு உண்மை தெரியும்.


தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்ற கூடாது. காவல் துறையினர் தொடர்ந்து அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அவர்கள் எந்த வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பணியாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும்.


இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது சட்டப்படி சரி தான். அதில் தவறில்லை. அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் தான் அவரின் அடையாளத்தை வெளியிட்டோம்.


பா.ஜ.க குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்து தேவையில்லாத கருத்து. சட்டம் ஒழுங்குக்கு அவரே கலங்கம் ஏற்படுத்துகிறார். மாணவியின் விவகாரத்தில் அந்த மாணவி பேசிய வீடியோ உண்மை என தெரிந்த பின்பு தான் நீதிக்காக போராட்டம் நடத்துகிறோம்.


வேறு மதத்தை சேர்ந்த பெண் இறந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் போராட்டம் நடத்துவோம். நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட பங்கீட்டில் பா.ஜ.க வுக்கும் பாதகம் இல்லாமல் அ.தி.மு.கவுக்கும் பாதகம் இல்லாமல் ஒரு முடிவை எடுப்போம். இன்று இரவுக்குள் அதை அறிவிப்போம் என்றார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR