கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்... மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!
Kilambakkam Nearest Railway Station: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர், கிளாம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் நகருக்குள் செல்லலாம் என நினைத்திருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்பதை இதில் காணலாம்.
Kilambakkam Nearest Railway Station: பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஜன. 12ஆம் தேதி இரவில் இருந்தே பலரும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதற்கென அரசு தரப்பில் பல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
முடிந்தது பொங்கல் விடுமுறை
பொங்கல் பண்டிகையில் முக்கிய தினமான தை பொங்கல் கடந்த ஜன. 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. எனவே, போகி பண்டிகையான கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சென்னை சாலைகள் நெருக்கடி இன்றி காணப்பட்டன. தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், இன்று காணும் பொங்கல் என பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, சுற்றுலா சென்றவர்களும், பண்டிகை கொண்டாட வெளியூர் சென்றவர்களும் இன்று இரவு சென்னைக்கு திரும்புவதற்கு தங்களின் பயணத்தை தொடங்குவார்கள்.
இதில் ரயிலில் செல்வோர் ஒருபுறம் இருக்க, பேருந்தில் செல்வோருக்குதான் இரட்டிப்பு வேலை எனலாம். முதலில், சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்லும். காலை 6-7 மணிக்கு முன் வந்தால் கிண்டி, வடபழனி வழியாகவும், அதற்கு மேல் வந்தால் மதுரவாயல் பைபாஸ் வழியாகவும் கோயம்பேட்டிற்கு பேருந்துகள் வரும்.
மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!
ரயில் நிலையம் இல்லை
இப்போது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலேயே அரசு பேருந்துகள் நின்றுவிடும். அங்கிருந்து வேறு பேருந்து மூலமோ அல்லது மின்சார ரயில் மூலமோதான் சென்னை நகரத்திற்கு செல்ல முடியும். இருப்பினும், ஆம்னி பேருந்துகள் தற்போது கோயம்பேடு வரை செல்கின்றன. எனவே, அதில் பிரச்னை இல்லை.
கிளாம்பாக்கத்தில் பேருந்தில் இருந்து இறங்கியதும், தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல குறைந்த இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு சிலர் மின்சார ரயில் மூலம் நகருக்குள் செல்ல திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், அதில்தான் சிக்கல் உள்ளது. கிளாம்பாக்கத்தில் தற்போது மின்சார ரயில் நிலையம் இல்லை. அதன் அருகில் என்று எடுத்துக்கொண்டால் ஒன்று வண்டலூரில் இருக்கிறது, மற்றொன்று ஊரப்பாக்கத்தில் உள்ளது. மிக அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் 1.5 கி.மீ., தூரமாகும்.
எங்கே இறங்குவது?
எனவே, ஊரில் இருந்து அரசு பேருந்தில் வருவோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன்னர் வரும் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கிக்கொள்வது நல்லது. அங்கிருந்து ரயில் நிலையம் சாலை அருகிலேயே இருக்கும், அங்கிருந்து எளிதாக நடந்து சென்றுவிடலாம். அந்த ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, தாம்பரம் வழியாக நீங்கள் நகரினுள் எங்கு வேண்டுமானாலும் மின்சார ரயில் மூலம் சென்றுகொள்ளலாம். பேருந்து ஓட்டுநர்களிடம் பலரும் கேட்கும்பட்சத்தில் அங்கு மக்கள் இறங்கிக்கொள்ளவும் வசதி ஏற்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... சென்னை வர சிறப்பு ரயில் - விவரம் உள்ளே!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ