சென்னை: தமிழக அரசின் (Tamil Nadu Government) வேண்டுகோளுக்கு இணங்க தெற்கு ரயில்வே (Southern Railways) சிறப்பு ரயில்கள் மீதான தடையை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. அதற்கு முன்னர் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15 வரை இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று (Corona Virus) அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் சிறப்பு ரயில்களை (Special Trains) இயக்குவது தொற்று இன்னும் அதிகமாகப் பரவ வழி வகுக்கும் என கருதிய தமிழக அரசு, அந்த முடிவை ரயில்வே துறையிடம் தெரிவித்தது.


டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் 6 மாதங்களுக்குள் தங்கள் பணத்தை கவுண்டரில் திரும்பப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.


ALSO READ: இன்று தமிழகத்தில் கொரோனா நிலவரம்: பாதிப்பு- 5,835; மரணம் -119


தமிழகத்தைப் பொறுத்த வரை கொரோனா தொற்று தினமும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. முதலில் சென்னையை மட்டும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கொரோனா தொற்று இப்போது மற்ற மாவட்டங்களிலும் வெகுவாகப் பரவியுள்ளது. எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுகப்பட்டு வருகின்றன. 


ALSO READ: கோவிட் -19: மதுரை மாவட்டத்தில் கோவிட் -19 நோயால் ஆறு மருத்துவர்கள் இறப்பு