கோவிட் -19: மதுரை மாவட்டத்தில் கோவிட் -19 நோயால் ஆறு மருத்துவர்கள் இறப்பு

ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி கோவிட் காரணமாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல். 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 12, 2020, 04:05 PM IST
கோவிட் -19: மதுரை மாவட்டத்தில் கோவிட் -19 நோயால் ஆறு மருத்துவர்கள் இறப்பு title=

மதுரை: ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி கோவிட் காரணமாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ - Indian Medical Association) மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஐ.எம்.ஏ இன் மதுரை (Madurai) கிளையின் தலைவர் டாக்டர் வி.என்.அழகவெங்கடேசன் (Alagavenkatesan) கூறுகையில், ஊரடங்கு காலத்திலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இறந்த 11 மருத்துவர்களில் கோவிட் -19 காரணமாக இரண்டு மருத்துவர்கள் இறந்துள்ளனர் என அவர்களின் குடும்பத்தார் சமர்பித்த ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டது. 

ALSO READ |  Coronavirus News: தமிழகத்தில்இன்றைய நிலவரம் என்ன? பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு

கடந்த மூன்று நாட்களில், இறந்த மருத்துவர்களின் இன்னும் சில குடும்பங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்தன. ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், மாவட்டத்தைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் (Doctors) இதுவரை COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

மற்ற காரணங்களால் மூன்று மருத்துவர்கள் இறந்தனர். மேலும் இறந்த இரண்டு மருத்துவர்களின் குடும்பங்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க முன்வரவில்லை என்று டாக்டர் அழகவெங்கடேசன் கூறினார்.

ALSO READ |  காலனாய் மாறிய Mobile Phone Charger: கரூரில் நடந்த பரிதாபம்!!

இறந்த மருத்துவர்கள் டாக்டர் ஆர்.ராமச்சந்திரன், டாக்டர் டி ஆர் தியானேஷ், டாக்டர் கே கோவிந்தராஜன், டாக்டர் டபிள்யூ எட்வின் சவாரிராய், டாக்டர் வி முருகேசன் மற்றும் டாக்டர் எஸ் ஆர் லட்சுமி காந்தம் என அடையாளம் காணப்பட்டனர்.

Trending News