ஆரணியை அடுத்த பையூர் கிராமம் பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பாலாஜி. சமூக வலைதளங்களில் உள்ள இவரது புகைப்படத்தை பயன்படுத்தி ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ்  என்பவர் பல பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பெற்று வந்தள்ளார். சமூக வலைதளங்களில் பாலாஜியின் நண்பர் அதனை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என விசாரித்து, பாலாஜியின் புகைப்படத்தை பயன்படுத்துவது  ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆரணி பஸ் நிலையம் அருகே பாலாஜி சென்றபோது, எதிரே வந்த பயாசிடம், என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீ பல பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வருவதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக்கூறி, உடனடியாக படத்தை அகற்றிவிடு எனக் கூறியுள்ளார். 



அப்போது அவருடன் இருந்த பாலாஜியை, பயாஸ் கையால் தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக பாலாஜி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பயாசை செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு


மேலும் படிக்க | நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR