மாங்காடு அருகே தனியார் ஆப் மூலம் பைக் புக் செய்து பயணம் செய்த நபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாம்பரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தச்சுத்தொழிலாளியான இவர், நேற்று மதியம் ஆவடியில் வேலைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். அதற்காக ஆப் மூலம் பைக்கை புக் செய்து அதில் சென்று கொண்டுந்தார். கார், ஆட்டோ போல பைக்கில் பயணம் செய்ய புக் செய்யவும் சில ஆப்கள் உள்ளன. 


பிரகாஷ் புக் செய்ததும் சந்தோஷ் என்ற ஓட்டுநர் அந்த புக்கிங்கை எடுத்துள்ளார்.  திருமுல்லைவாயலை சேர்ந்த சந்தோஷ் குமார் தனது பைக்கை ஆப்பில் இணைத்துள்ளார். 



மேலும் படிக்க | டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு


பிரகாஷை ஏற்றிக்கொண்டு மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது படு வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியதில் பைக்கில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


ஹெல்மெட் அணிந்திருந்ததால் பைக்கை ஓட்டி வந்த சந்தோஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே தகவலறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



அதோடு பைக்கை ஓட்டி வந்த 24 வயது இளைஞர் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக பைக் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 


ஆன்லைனில் பைக்கை புக் செய்து பயணம் செய்தால் பின்னால் அமர்ந்து வரக்கூடிய வாடிக்கையாளருக்கும் ஹெல்மெட் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இந்த விபத்தில் பைக்கை ஓட்டியவர் மட்டும் ஹெல்மெட் அணிந்ததால் அவர் மட்டும் உயிர்தப்பினார். ஒருவேளை பிரகாஷ் ஹெல்மெட் அணிந்திருந்தால் அவரும் உயிர் பிழைத்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | இனி பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!


ஆப் மூலம் பைக் ஓட்டும் நபர்கள் அதிக  ஆர்டரை எடுக்க வேண்டும் என்பதால், அதி வேகமாக பைக் ஓட்டி வருவது வாடிக்கையாகியுள்ளது. சமீபத்தில் ஜொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்துக்குள் உணவு டெலிவரி செய்யப்படும் என்று விளம்பரம் செய்தது. அதற்கு தமிழக காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த அறிவிப்பு சென்னைக்கு பொருந்தாது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. 


வியாபார நோக்கத்துக்காக தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களை இதுபோன்ற நிறுவனங்கள் அவசரப்படுத்துவதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR