எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களான ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், அவரது மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல், கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் உள்ளிட்டோரையும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சி பணியாற்ற வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 



இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுகவுக்கு 14 புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார்.


மேலும் படிகக் | பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு விஜயகாந்த் அட்வைஸ்


இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ வி.என்.பி. வெங்கட்ராமன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக ஆர். தரம்ர், மதுரை மாவட்ட செயலாளராக ஆர். கோபாலகிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளராக செல்வராஜ், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, சென்னை தெற்கு (மேற்கு)  மாவட்ட செயலாளராக பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | எந்த நெருக்கடி வந்தாலும் மீனவர்கள் கைது தொடர்கிறது - வேதனைப்படும் வைகோ


மேலும், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக அம்பிகாபதி, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ரமேஷ், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ராஜ்மோகன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக மகிழன்பன், சிவகங்கை மாவட்ட செயலாளராக ரஞ்சித், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டிருக்கிறார்.


ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டதாக இபிஎஸ் கூறிவரும் சூழலில் தொடர்ந்து ஓபிஎஸ் நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் நியமித்துவருவது அக்கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ