திமுக எம்எல்ஏ -வாக இருந்த புகழேந்தி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆனால், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி! திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி முழக்கம்!


இது குறித்து எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் விளக்க அறிக்கையில், " ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்துவோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தலும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது" என கூறியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கிறது என்பதால், இப்போது எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் முடிவு பெரிய விஷயமல்ல என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இடைத்தேர்தல் பொதுவாக ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பதால் இதற்கு தேவையில்லாமல் நேரத்தையும், தொண்டர்களையும் சிரமப்படுத்த வேண்டாம் என அதிமுக தலைமை இத்தகைய முடிவு எடுத்திருக்கிறது.  


ஜெயலலிதா இருந்த போது அதிமுக vs திமுக என்ற போட்டி இருந்ததே தவிர அப்போது மூன்றாவது என்ற ஒரு கட்சியும் களத்தில் இருக்கவில்லை. ஆனால், அதிமுகவின் இடத்தை பிடிக்க அனைத்து வழிகளையும் பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அதிமுக இடமளிக்காமல் தேர்தல் களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கியை தக்க வைக்கவும், அரசியல் தளத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பதை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நிரூப்பிக்க இருந்த ஒரு அருமையான வாய்ப்பை அதிமுக வீணடித்துவிட்டது என்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.


இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு பின்னணியில் டெல்லி மேலிடத்தில் வந்த உத்தரவே காரணம் என்று தெரிவித்திருக்கிறார். பாமக வேட்பாளருக்கு பாஜக நேரடியாகவும், அதிமுக மறைமுகமாகவும் உதவும் என்பதால் திமுக வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க இந்தியா கூட்டணியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ