கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதியை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, காமராஜர் நகர், எம்ஜிஆர் நகர், கக்கன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி சிறுத்தைகள் நடமாடி வருவதோடு அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் பிடித்து செல்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள ஸ்டான்மோர் பிரிவு சாலையில் சர்வ சாதாரணமாக ஒரு சிறுத்தை நடந்து செல்வது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. சிறுத்தையின் நடமாட்டத்தால் பீதியில் இருக்கும் அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



ALSO READ: திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!! 


மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் சமீப காலங்களில் அதிகமாக உள்ளது. இது மக்களின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.


ALSO READ:Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR