Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ்

தமிழக போலீசார், சினிமா பாணியில் விரட்டிச் சென்று கொள்ளையர்களை பிடித்த சம்பவம் மக்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2021, 08:07 AM IST
  • சினிமா பாணியில் திருடர்களை பிடித்த தமிழக போலீஸ்
  • கொள்ளையடித்த பணம் சிக்கியது
  • கள்ள நோட்டு மாற்றும் கும்பல் கைது
Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ் title=

சென்னை: தமிழக போலீசார், சினிமா பாணியில் விரட்டிச் சென்று கொள்ளையர்களை பிடித்த சம்பவம் மக்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ். அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் நேற்று மாலை காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

கனகராஜின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று,  போலீசார் என கூறி நாடகம் ஆடி, வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடியது. உடனே, இதுதொடர்பாக கனகராஜ் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர தேடுதல் பணியை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

READ ALSO | குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி ₹6.30 கோடி மோசடி.

அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்றபோது காரில் இருந்த மர்ம நபர்கள் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றனர். போலீசார் அவர்களை விடாமல் துரத்தினர்.

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த கொள்ளையர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அவர்களை துரத்திச் சென்றுக் கொண்டிருந்த போலீசார், உடனடியாக காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தது. 

காரை சோதனை மேற்கொண்டதில் காரில் இருந்த இரண்டு பைகளில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் (Unaccounted Money) இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, காரில் இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் ஆகிய  மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து  சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

THEIF

விசாரணையில், அவர்கள் 3 பேரும் காவல்துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுவந்த சரத்,சதிஷ் , தினகரன்) ஆகிய  மூன்று பேரையும் அவர்கள் பயன்படுத்திய  காரையும் அவர்களிடமிருந்து 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன. மேலும் நேற்று  வழிப்பறி நடைபெற்றதாக  புகார் அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News