விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் 72  மாணவர்களின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர்,  இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளிக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பெற்றவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆசிரியரின் தவறான அணுகுமுறையை கண்டித்த மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, இயற்பியல் ஆசிரியர் நந்தாகோபாலை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12 மணி அளவில் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட  மாணவர்கள் தேர்வு எழுதினர். மதிய உணவு நேரம் நெருங்கி வந்ததால் சீக்கிரம் தேர்வை முடிக்க வேண்டும் என சொல்லி இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் அனைத்து மாணவர்களையும் பிரம்பால் முதுகில் அடித்துள்ளார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சார்ஜ் எடுத்துக்கொண்ட பகலவன் ஐபிஎஸ்-ஸின் அடுத்த மூவ்


12 ஆம் வகுப்பு ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் நந்தகோபாலின் இந்த அடாவடியால், 72 மாணவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதைத்தவிர, மதிய உணவு இடைவேளை ஒரு மணிக்குவிட வேண்டும். ஆனால் தொடர்ந்து 1:30 மணி வரைக்கும் தேர்வு எழுத வைத்து அதன் பின்பு உணவு இடைவெளி விட்டிருக்கிறார். 



இந்த விவகாரத்தை பள்ளி மாணவர்கள் வீட்டுக்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதையடுத்து இன்று காலை பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.  


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ


50-க்கும் மேற்பட்ட பெற்றோர், தலைமை ஆசிரியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். பின்பு செஞ்சி வட்டாட்சியர் நெகுருன்னிசா மற்றும் செஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


மாணவர்களிடம் விசாரணை செய்தபோது, ஆசிரியர் பிரம்பால் அடித்ததற்கான தழும்புகள் மாணவர்களின் உடலில் இருந்தன. இதைப் பார்த்து காவல்துறையினரும் வருவாய்த்துறை  அதிர்ந்து போனார்கள். ஆசிரியரை விசாரிக்க அழைத்தபோது, காலையில் பள்ளிக்கு வந்த அவர், பெற்றோரின் முற்றுகையை அடுத்து மாயமாகிவிட்டார்.


மாணவர்களிடம் முறைகேடாக நடந்துக் கொண்ட ஆசிரியர் நந்தகோபல் மீது, உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில் பெற்றோர்களும், மாணவர்களும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மேலும் படிக்க | நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் - நெல்லையில் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ