பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்குச் சென்று பல திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையின் போது ஒன்று, Arjun Main Battle Tank (MK-1A) என்று  புதிய வகை பீரங்கியை இந்திய ராணுவத்திடம் சென்னையில் ஒப்படைப்பது. இந்த பீரங்கி உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள்:


சென்னை மெட்ரோ ரயில் கட்டம் -1 விரிவாக்கத்தை பிரதமர் மோடி தொடங்கவுள்ளார்


3,770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட சென்னை (Chennai) மெட்ரோ ரயில் கட்டம் -1 விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, வண்ணார பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரையிலான ரயில் சேவையை தொடக்கி வைப்பார். 9.05 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், வட சென்னையை விமான நிலையம் மற்றும் மத்திய ரயில் நிலையத்துடன் இணைக்கும்.


சென்னை கடற்கரைக்கும் அத்திப்பட்டுக்கும் இடையில் 4 வது ரயில் பாதையை பிரதமர் திறந்து வைப்பார்


சென்னை கடற்கரைக்கும் அத்திபட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைப்பார். ரூ .293.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த 22.1 கி.மீ வழித்தடம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று சென்னை துறைமுகத்திலிருந்து செல்லும்  போக்குவரத்தை எளிதாக்கும். இந்த பிரிவு சென்னை துறைமுகம் மற்றும் என்னூர் துறைமுகத்தை இணைப்பதோடு முக்கிய யார்டுகள் வழியாக செல்கிறது, 


சிங்கிள் லைன் பிரிவின் ரயில்வே மின்மயமாக்கல் திட்டத்தை துவக்கி வைக்கிறார்


விழுப்புரம் - கடலூர் - மயிலாடுத்துரை - தஞ்சாவூர் மற்றும் மயிலாதுதுரை-திருவாரூர் ஆகிய இடங்களில் சிங்கிள் லைன் பிரிவின் ரயில்வே மின்மயமாக்கல் திட்டத்தை பிரதமர் (PM Narendra Modi) துவக்கி வைப்பார். ரூ. 423 கோடி, செலவில் அனைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 228 கி.மீ பாதை மின்மயமாக்கல் மூலம் சென்னை எக்மோர் மற்றும் கன்னியாகுமரி இடையே ட்ராக்‌ஷன் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போக்குவரத்தை எளிதாக்க உதவும். மேலும், எரிபொருள் செலவில் ஒரு நாளைக்கு ரூ .14.61 லட்சம் அளவு சேமிக்கப்படும்.


ALSO READ | போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்


பிரதமர் மோடி அர்ஜுன் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பார்


இந்த நிகழ்வின் போது, ​​பிரதமர் அதிநவீன அர்ஜுன் பீரங்கியை (Arjun Main Battle Tank -MK-1A)  இந்திய ராணுவத்திடம் (எம்.கே.-1 ஏ) இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பார். இந்த பீரங்கியை VRDE, DRDO மற்றும் 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல MSME நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து செயலாற்றி, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


பிற திட்டங்கள்


கிராண்ட் அனிகட் கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு கால்வாய் முக்கியமானது. இந்த கால்வாயின் நவீனமயமாக்கல் ரூ.2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்படும், மேலும் கால்வாய்களின் கொள்திறன் மேம்படும்.


சென்னை ஐ.ஐ.டி -யின்( IIT)  டிஸ்கவரி வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் முதல் கட்டமாக ரூ .1000 கோடி செலவில் சென்னைக்கு அருகிலுள்ள தாயூரில் இந்த வளாகம் கட்டப்படும்.


இந்நிகழ்ச்சியில் ஆளுநரும், தமிழக முதல்வரும் கலந்து கொள்வார்கள்.


பிப்ரவரி 14 மாலை 3:30 மணியளவில், பிரதமர் கொச்சியில்,பல்வேறு திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணிப்பார். இந்த திட்டங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் முழு வேகத்துடன் செல்ல உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; பிரதமர், முதலைமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR