குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கபட்டதை கண்டு நாடு அதிர்ச்சி: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2021, 02:30 PM IST
  • கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.
  • குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியும், மிகவும் வருத்தமும் அடைந்துள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று அசத்தியது.
குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கபட்டதை கண்டு நாடு அதிர்ச்சி:  பிரதமர் மோடி  title=

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம். 

அந்த வகையில் இன்றைய மன் கீ பாத் (Mann Ki Baat)  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியும், மிகவும் வருத்தமும் அடைந்துள்ளனர் என்றார். 

அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

- ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  வென்று அசத்தியது. நம் இந்திய அணி ஒன்றிணைந்து செயல்பட்டதும் கடின உழைப்பும், தான் இதற்கு காரணம் என பாராட்டினார். 

- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாட உள்ள நிலையில் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்

-  சுதந்திர இயக்கத்தின் மாவீரர்களுக்கு சிறந்த அஞ்சலி செலுத்தும் வகையில், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து எழுதுங்கள் என கேட்டுக் கொண்டார். 

- கொரோனாவிற்கு (Corona Virus) எதிரான போராட்டத்தில், இந்தியா சிறப்பாக கையாண்டதோடு, இரண்டு மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். 

அமெரிக்காவின் (America) சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு நேரடியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்து நான்கு இந்திய பெண் விமானிகளை பாராட்டினார். கிட்டத்தட்ட 10,000 கி.மீக்கும் அதிகமான தொலைவிற்கு பெண் விமானிகள் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர். 

மற்றவர்கள் ஊக்கம் கொடுக்கும் வகையில் சேவை செய்யும், சாதனை படைக்கும் நபர்களை அங்க்கிகரிக்கும் வகையில் பாராட்ட்டும் பிரதமர் மோடி, இந்த முறை கேரளாவின் கோட்டையத்தில் என்.எஸ்.ராஜப்பன் என்ற வயதான நபரின் சேவையை பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். 

ALSO READ | தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம்: JP Nadda

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News