வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி (GK Mani) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


பா.ம.க. (PMK) நிறுவனர் மருத்துவர் அய்யா திரு.இராமதாஸ் (Dr.Ramadoss), பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார் என அவர் குறிப்பிட்டார்.  பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். வன்னியர்கள்  இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரித்தார்.


முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதியன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது, அது நியாயமற்ற செயல் என பாமக தலைவர் இராம்தாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். 


ஒப்பீட்டளவில் உயர்ந்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவங்களான எய்ம்ஸ் (AIIMS), முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஓதுக்கீடு மறுக்கப் படுவது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். 


ALSO READ | COVAXIN: 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR