கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | கொடநாடு கொள்ளை வழக்கு - சசிகலா பரபரப்பு அறிக்கை
அண்மையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாகவும், அவர் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனை தனிப்படை போலீசார் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி அவர் இன்று தனிப்படை காவல்துறையில் ஆஜரானார். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. பூங்குன்றன் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொள்ளை முயற்சிகள்! மர்மம் என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR