ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தில் மும்பையும், 9ஆவது இடத்தில் சென்னையும் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையைப் பொறுத்தவரை ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் சென்னை இன்றைய போட்டியில் வென்று டெல்லி, பஞ்சாப் அணிகள் இனிவரும் போட்டிகளில் தோல்வியடைந்தால் சென்னை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.


இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்தச் சூழலில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.



அதன்படி சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வேயும் தொடக்கம் தந்தனர். முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட கான்வேயின் பேடில் அந்த பந்து பட்டது.


இதனையடுத்து எல்பிடபிள்யூக்கு மும்பை அணி முறையிட்டது. களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். உடனடியாக ரிவ்யூக்கு செல்லலாம் என கான்வே முடிவெடுக்க, மைதானத்தில் மின்சாரம் இல்லாததால் டிஆர்எஸ் எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா?


இதனால் கான்வேயிலிருந்து சென்னை ரசிகர்கள்வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், முக்கியமான போட்டியில் இப்படி மின்சாரம் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.


அதேசமயம், மின்சாரம் வந்ததும் மீண்டும் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், சென்னைக்கு எப்படி முதல் இரண்டு ஓவர்களில் டிஆர்எஸ் வழங்கப்படவில்லையோ அதேபோல் மும்பைக்கும் முதல் இரண்டு ஓவர்களுக்கு டிஆர்எஸ் வழங்கப்படக்கூடாது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி மின்சாரம் இல்லையென்றால் போட்டியை சிறிது நேரம் ஒத்திவைத்திருக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR