இரட்டை வேடம் போடும் திமுக : ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு
மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்ட திமுக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனவும் மது விற்பனை மூலம் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அப்போது திமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது. தற்போது அதற்கு முற்றுலும் முரனாக,மதுபான விற்பனையை அதிகரிக்கவும், மதுபானக்கடைகளுக்கு அருகே மதுபானக்கூடங்களை அமைக்கவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் பார்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ டாஸ்மாக் நிறுவனம் நடத்தக்கூடாது எனவும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள பார்களை அடுத்த 6 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து திமுக அரசு தற்போது மேல் முறையீடு செய்துள்ளது. அது மட்டுமின்றி, மதுபானத்தால் வரும் வருவாயை உயர்த்த 10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை மதுபானங்களுககான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஒருபுரம் பேசி விட்டு மறுபக்கம் மதுபான விலை உயர்வு, மதுபானக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை என திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.இதை உடனடியாக கைவிட்டு விட்டு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தவாறு மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெறவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மதுபானங்கள் விலை உயர்வு - குழம்பிப்போய் குமுறும் குடிமகன்கள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR