சென்னை: டாஸ்மாக் மதுபானங்கள் உயர்த்தப்பட்ட விலையுடன் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். 180 மில்லி அளவு கொண்ட குவார்ட்டர் ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கும் போது, "ஓட்டுப்போட குடுத்தாங்க 500, விலையுயர்வை பார்த்தால் வருது கண்ணீரு", "குடுத்தீங்க ஓட்டுக்கு நோட்டு, இப்போ போடீறீங்க எக்ஸ்ட்ரா ரேட்" என பஞ்ச் டயலாக் உடன் குடிமக்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர், அதிமுக ஆட்சியில் மதுபான விலை ஏற்றத்தை எதிர்த்து இதே திமுக போராட்டம் செய்தது, தற்போது அதே திமுக விலையை ஏற்றியுள்ளது எனவும், சிலர் இனி மூன்று வருடத்திற்கு தேர்தல் இல்லை எனும் தைரியத்தில் திமுக இருக்கிறது எனவும், சிலர் அடுத்த ஆட்சியில் உங்களுக்கு ஓட்டு இல்லை, அடுத்த தேர்தல் வரட்டும் என எச்சரிக்கும் வகையில் ஆவேசமாகவும் சிலர் பேசினார்கள்.
மேலும் படிக்க: இன்று முதல் உயரும் சரக்கு விலை; ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி!
விலையேற்றம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, பீர் முதல் குவாட்டர் வரை விலை ஏற்றியுள்ளது திமுக அரசு. திமுக சொன்னது போல விடியலை நோக்கி விரைந்து செல்கிறோம் போல என விமர்சித்திருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தை அடுத்து, "பாட்டில் பிரியர்களுக்கு குரல் கொடுத்த பாஜக தலைவருக்கு நன்றி.. நன்றி.. நன்றி,,!" என மதுகுடிப்போர் சங்கம் சார்பாக என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து சங்க நிர்வாகி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தககது.
மேலும் படிக்க: மதுபானங்களின் விலையை உயர்த்தியது பெரும் தவறும் -குமுறும் குடிமகன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR