கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல் நடக்கிறது.
Body:
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் வாகனங்களுடன் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு முத்திரை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி (Toll Gate) கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இங்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு அடிக்கடி கட்டணம் கேட்டு வசூல் செய்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண வசூல் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 


மேலும் ராஜபாளையம் டி.கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் (Vehicles) ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சுங்கச்சாவடியை பயன்படுத்துவதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 20 தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். 


ALSO READ: ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது


ஆனால் கடந்த இரு தினங்களாக டி.கல்லுப்பட்டி பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி  வாடகை வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் இப்பகுதியில் வாடகை வாகனங்கள் சொந்தக்காரர்கள் மற்றும் லாரிகளை  நிறுத்தி சுங்கச்சாவடியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.


திருமங்கலம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற (Court) உத்தரவையும் மீறி அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டு வாக்குவாதம் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றன. 


இந்த முற்றுகை போராட்டம் கடந்த 2 மணி நேரமாக நீடித்து வருகிறது. மேலும் வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


ALSO READ: கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!