ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது

சென்னை தலைமைச் செயலகம் அருகே போலி அரசு பணி நியமன ஆணைகளுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 01:59 PM IST
ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது title=

சென்னை, தலைமைச் செயலகம் அருகே போலி அரசு பணி நியமன ஆணைகளுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் குமார் (40) ஆவார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் (50) சில மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதுதொடர்பாக குமார் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

ALSO READ | நான் யார் தெரியுமா? குடிபோதையில் சக போலீசாரிடமே ரகளை செய்த காவலர்

அதன்பேரில் தலைமைச் செயலகத்தின் எதிரே பொதுப்பணித்துறை இடத்தில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமாரை கோட்டை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு துறைகள் மற்றும் அரசு பள்ளிகளில் வேலை வாங்கித்தருவதாக பலரை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்த 6 போலி பணி நியமன ஆணைகளையும், 55 ஆயிரம் ரொக்கம் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவருடைய பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ | கைவிட்ட காதல்கணவன்; குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News