மு.க.ஸ்டாலின் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..காரணம் இதுதானா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 2024 கூட்டத்தொடர்: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 20 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு ஒதுக்கப்பட உள்ளது, சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அந்தவகையில் முன்னதாக 2021 ஆம் தேதி நடந்த தமிழக தேர்தலில் திமுகவின் அறிக்கையில் இடம்பெற்ற மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இம்முறை பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!
எனவே தமிழக பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான நிலையில் மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறனர், மேலும் இந்த திட்டத்தின் பலன் யார் யாருக்கு கிடைக்கும், எப்போது தொடங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று முதல்வர் ஸ்டாலினின் அறைக்கு சென்ற நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டார். பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடம் நடந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இவர்கள் பேசி உள்ளனர். முக்கியமாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத் தொகை குறித்து கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இளைஞர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழகத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அமைச்சர் மா.சு. விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ