EVKS Elangovan Hospitalized: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இன்று (மார்ச் 15) இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தமிழகத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அமைச்சர் மா.சு. விளக்கம்!
அந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். சுமார் 34 ஆண்டுகளுக்கு பின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த மார்ச் 10ஆம் தேதி சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தார்.
E V K S Elangovan is admitted at Chennai Porur Hospital with complaints of Chest congestion due to the cold.
According to EVKS Elangovan's close circle, "He is fine. He is at the hospital to drain out chest congestion".@INCTamilNadu
— Vijayagopal Muralidharan (@vijayagopal_) March 15, 2023
தொடர்ந்து, அவர் வரும் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. அவர் நலமாக உள்ளார் என்றும் நெஞ்சுவலியை போக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஈவிகேஎஸ் இளங்கோவனின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ