சென்னை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதுச்சேரியிலும் கட்சிகளுக்கு இடையே பெரும் பூசல்களும் குழபங்களும் துவங்கியுள்ளன. காங்கிரஸின் கோட்டையான புதுச்சேரியில், அதிக தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதற்காக கட்சியில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்களை நேர்காணல் செய்ய வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் திக்விஜய் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளரான வெங்கடேசன் உள்ளிட்ட தொண்டர்களின் ஒரு பிரிவு திமுக கொடியைக் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவர்கள் தொண்டர்களை சமாளிக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது.


"திமுக (DMK) வேட்பாளர்கள் தோற்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று திரு வெங்கடேசன் கூறினார். "தமிழ்நாட்டின் திமுக தலைமையகத்தில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக் கூடாது. இது புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.


ALSO READ: TN election 2021:21 தொகுதிகளுக்கான காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


2016 ல் காங்கிரஸ் (Congress) 21 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது; திமுக 8 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் வென்றது. சிபிஐ போட்டியிட்ட ஒரே ஒரு இடத்திலும் அதனால் வெல்ல முடியவில்லை. இருப்பினும், இந்த முறை, 15 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுகவுக்கு மேலும் ஐந்து இடங்கள் கிடைத்துள்ளன. திரு நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பையும் காங்கிரஸ் திமுகவிற்கு வழங்கியுள்ளது.


ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த மாதம் புதுச்சேரியில் உள்ள நாராயணசாமி அரசாங்கம் பதவியில் இருந்து விலகியது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான நமசிவாயம் உட்பட இருவர் பாஜகவில் இணைந்தனர். கட்சி தனது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.


புதுச்சேரியின் மாறிய அரசியல் சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத பாஜக (BJP), மூன்று பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன், முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸின் உதவியைப் பெற்று, அதிமுக-வுடன் கூட்டு சேர்ந்தது. இன்னும் இந்த கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கபடவில்லை.


தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளையும் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு ஒரு மக்களவை தொகுதியையும் வழங்கியுள்ளது.


ALSO READ: வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி; பாஜவின் இணைந்தார் திமுக MLA சரவணன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR